கர்நாடகத்தில் வேலையில்லா திண்டாட்டம், ஊழலே உண்மையான பயங்கரவாதம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்…!

133
Advertisement

கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது என்றும் அதுபற்றி பிரதமர் மோடி எதுவும் பேசாமல் மவுனமாக இருந்து வருகிறார் எனவும் சாடினார். வேலையில்லா திண்டாட்டம் மற்றும் ஊழலே உண்மையான பயங்கரவாதம் என விமர்சித்தார்.