கரிபியன் தீவிலிருந்து மியாமி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ரெட் ஏர் விமானத்தில்,தரையிறங்கும் கியர் செயலிழந்ததால், தரையிறங்கும் பொது தீ பிடித்து எரியத்தொடங்கியது.
செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணியளவில் இந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் நடந்துள்ளது.விமானத்தில் 11 பணியாளர்கள் உட்பட 126 பேர் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் தீ பிடித்தபடி தரையிறக்கப்பட்டது.
தரையில் இருந்த மீட்புக்குழு உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.மற்றொருபுறம் பயணிகள் பத்திரமாக ஆபத்து நேரத்தில் வெளியேறும் வழியாக விரைவாக வெளியேற்றப்பட்டனர்.அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை.
விமானத்திலிருந்து வெளியேறிய மக்கள் பதறிஅடித்தபடி ஓடிவருவது பார்ப்பவர்களின் நெஞ்சை பதறவைத்துள்ளது.விபத்தையடுத்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் சம்பவ இடத்திற்கு புலனாய்வு குழுவை அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் டொமினிகன் இன்ஸ்டிடியூட் ஆப் சிவில் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என ரெட் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.