கோயமுத்தூரில் மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர்

352

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பாக இரண்டுபாலங்கள் காணொலிக்காட்சி மூலம்திறந்து வைக்கப்பட்டன.

ராமநாதபுரம் மற்றும் சுங்கம் சந்திப்புகளை இணைக்கும் வகையில், 230 கோடிரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நான்கு வழித்தட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

சுமார் மூன்றரை கிலோமீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்டுள்ள மேம்பாலம் இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கவுண்டம்பாளையம் சந்திப்பில், 60 கோடிரூபாய் மதிப்பீட்டில் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு கட்டப்பட்ட பாலத்தையும் முதல்வர் இன்று திறந்துவைத்தார்.