காலநிலை மாற்றம் என்பது வெப்பநிலை மற்றும் வானிலை முறைகளில் நீண்ட கால மாற்றங்களைக் குறிக்கும் ஒன்றாகும். சூரியனின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது பெரிய எரிமலை வெடிப்புகள் காரணமாக இத்தகைய மாற்றங்கள் காரணமாக அமைகிறது. தற்போது, நாடு முழுவதும் குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்குமென வானிலை இயக்குனர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
பொதுவாகவே, உலகத்தை பொறுத்தவரையில் 4 பருவ காலங்களும் இந்தியாவை பொறுத்தவரையில் 6 பருவ காலங்களும் பின்பற்றப்படுகிறது. குறிப்பிட்டு, சொல்லவேண்டுமென்றால் டிசம்பர் மாத கடைசியில் தொடங்கி ஜனவரி மாதம் முழுவதும் குளிர்காலம் நிலவும். பிப்ரவரியிலும் லேசான குளிர் நிலவும். அதிகாலை நேரத்தில் அதிக குளிரால் பனி மூட்டம் ஏற்படுவது வழக்கம். ஆனால், தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதன் காரணமாக ரயில் மற்றும் விமானம் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு
இயல்பை விட அதிகமான வெப்பநிலை நீடிக்கும் என தனியார் வானிலை ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
குறிப்பிட்டு சொல்லப்போனால் கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகளிலும் பகல் நேரத்தில் இயல்பை காட்டிலும் வெப்பம் அதிகமாக பதிவாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்த வரையில் குறைந்த அளவே வெப்பம் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு, பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டிருக்கக்கூடிய எல் நினோ (EL- NINO- EFFECT) தாக்கம் காரணமாக இருக்கலாம். உலகின் மிகவும் பெரிய கடலான பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியா -ஆசியா பகுதியில் ஆண்டுதோறும் சூடான காற்று மேலெழும். அதேபோல, அதற்கு எதிர் திசையில் உள்ள அமெரிக்கப் பகுதியில் உள்ள பசிபிக் கடலில் குளிர்ச்சியான காற்று மேலெழும். இந்த இரண்டும் ஒன்று கலந்து வானிலையை சீராக வைத்திருக்கும். இந்த இரண்டு பசிபிக் கடல் பகுதியிலும் ஏதேனும் ஒரு பகுதியில் காற்று உருவாவது தடைபட்டுவிட்டால் வானிலையில் மாற்றம் ஏற்படும். இதைத்தான் எல் நினோ என்று சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை வெப்பம் குறைந்த அளவில் பதிவாகியிருப்பது, தமிழ்நாட்டு மக்களை நிம்மதி பெருமூச்சுவிட
செய்துள்ளது.
-ரிதி ரவி