உலக நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.இதன் காரணமாக அந்நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகள் உடன் முக்கியமான நகரங்கள் அனைத்திலும் லாக்டவுன் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதில் முக்கிய வர்த்கக நகரமான ஷாங்காய்-ம் ஒன்று.
ஷாங்காய் நகரத்தில் இருக்கும் 2.5 கோடி மக்கள் தற்போது கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடு காரணமாக வீட்டில் முடங்கியுள்ளனர். இதனால் மக்கள் தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் அடிப்படைத் தேவையான பொருட்களைப் பெறுவதில் பெரும் பிரச்சனையாக உள்ளது
மக்கள் வெளியே செல்லமுடியவில்லை , போக்குவரத்து தடை காரணமாக அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதும் கடுமையாக பாதித்துள்ளது.இந்நிலையில் மக்கள் பண்டமாற்று முறைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.பல ஆயிரம் வருடங்கள் முன் நாணயங்கள் அறிமுகம் செய்யப்படும் முன்பு நடைமுறையில் இருந்த இந்த பண்டமாற்று முறையை தற்போது சீனா மக்கள் கையில் எடுத்துள்ளனர்.
இதன் மூலம், தங்களுக்குத் தேவையான பொருட்களைப் பண்டமாற்று முறை மூலம் சரி செய்து வருகின்றனர். உதாரணமாக தின்பண்டத்திற்கு பதிலாகக் காய்கறி, வைன்-க்கு பதிலாகக் கேக் என மக்கள் தங்களது தேவைக்கு ஏற்ப பொருட்களை மாற்றிக்கொள்கின்றனர்.
மற்றொரு புறம் , அரசின் கடும் நடவடிக்கைகளுக்கு மத்தியில் மக்கள் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.