பூண்டும் கோதுமையும் வச்சு வீடு வாங்கலாமா?

221
Advertisement

சீனாவில் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையில் ரியல் எஸ்டேட் வர்த்தகம், தொடர்ந்து இறங்குமுகமாக சென்று கொண்டிருந்தது.

இந்த நிலைமையை சமாளித்து, விற்பனையை அதிகரிக்க சீன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் புதிய யுக்தியை கையாண்டு குறிப்பிடத்தக்க வெற்றியும் கண்டுள்ளன.

சென்டரல் சைனா என்ற நிறுவனம் 500 கிராம் கோதுமையை இரணடு யுவான் மதிப்புக்கு பெற்று கொள்வதாக அறிவித்தது.

இதே போல 160,000 யுவான்கள் வரையான பணத்தை விவசாயிகள் கோதுமை மதிப்பில் செலுத்தலாம்.

கிராமப்புற பகுதிகளில் வசிப்பவர்களையும், விவசாயிகளையும் குறி வைத்து செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் சிறப்பான வரவேற்பை பெற்று, 48.6% ஆக இருந்த சென்ட்ரல் சைனா நிறுவனத்தின் லாபம் 71.3% ஆக உயர்ந்துள்ளது.

இதே நிறுவனம், பூண்டுகளையும் மக்கள் பணத்திற்கு பதிலாக செலுத்தலாம் என அறிவித்ததை அடுத்து, 16 நாட்களில் 500 டன் பூண்டு பரிமாற்றத்துடன் வர்த்தகம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.