பிறந்த நாள் கொண்டாடடிய சிம்பன்சி குரங்கு

290

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்க்கு சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து கடந்த 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கொம்பி மற்றும் கௌரி ஆகிய சிம்பன்சி குரங்குகளுக்கு 16 வருடங்களுக்கு பிறகு பிறந்த சிம்பன்சி குட்டியான ‘ஆதித்தியா’வின்’ முதல் பிறந்தநாளை வண்டலூர் பூங்கா நிர்வாகம் கேக் வெட்டி கொண்டாடியது.

பிறந்த நாள் விருந்தின் ஒரு பகுதியாக, சிம்பன்சிகளுக்கு மிகவும் பிடித்தமான “உறையை வைத்த பழ கேக்” வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பூங்கா ஊழியர்கள், பார்வையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.