“துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்”

310

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தமது டுவிட்டர் பதிவில் துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்பதாக கூறியுள்ளார்.

கொரோனா என்ற பெருந்தொற்றால் பள்ளிக்கு நேரில் வந்து பயிலும் முறை தடைபட்டது என்றும் இருந்தாலும் இணையவழி மூலமாகக் கல்வி கற்றீர்கள் என தெரிவித்துள்ளார்.

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளை நோக்கிப் பிள்ளைகள் வருகிறார்கள் என்பதால் அவர்களைக் ஆசிரியர்கள் கனிவுடன் வரவேற்று அரவணைப்புடன் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும் என்றும் மாநிலம் பயன்பெறட்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.