புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர்

33

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 270.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 இடங்களில் கட்டப்பட்ட 2 ஆயிரத்து 707 புதிய  அடுக்குமாடி குடியிருப்புகளை, தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும், 4 ஆயிரத்து 880 குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளையும், தரமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 23 ஆயிரத்து 826 பயனாளிகளுக்கு 500 கோடி மதிப்பீட்டில் பணி ஆணைகளையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் அமைச்சர் தா. மோ. அன்பரசன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ் மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் ஹித்தேஷ்குமார் மக்னவானா ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement