அதிரடி முடிவெடுத்த முதலமைச்சர்

170

பீகாரில் விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், இதற்குபாட்னாவில் நேற்று நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பெருவாரியான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்று முதலமைச்சர் நிதீஷ்குமார் அறிவித்திருக்கிறார்.

பாஜகவின் எதிரியும் ராஷ்ட்ரீய ஜனதாதள் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி நிதீஷ்குமாருடன் இணைந்து இது தொடர்பாக பேட்டியும் அளித்திருக்கிறார்.

ஆனால்  நிதீஷ்குமார் பாஜக ஆதரவுடன் முதலமைச்சர் பதவியில் இருக்கிறார்.

மத்திய அரசோ சாதிவாரி கணக்கெடுப்பு சாத்தியமற்றது, குழப்பமானது என்று முடிவு செய்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனால் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனத தளமும், லல்லுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் விரைவில் கை கோர்க்கலாம் என்பதால் பீகார் அரசியலில் பெரும் மாற்றம் வரலாம் என பாஜக கருதுகிறது.