“கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்”

285

சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா பரவல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

கொரோனா தாக்கல் குறைவாக காணப்பட்டாலும் அதனை மேலும் உயராமல் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் போதிய பரிசோதனைகள், தொடர் கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை முறையாக பின்பற்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் திருவிழா, திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோரில் தொற்று ஏற்பட்டால் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும் எனவும், வேலை செய்யும் இடத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.