“மாணவர்களின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும்”

417

பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கல்வி பயில்வோருக்கு நல்ல தரமான உணவு தயாரித்து, உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

பள்ளி வளாகங்களில் உள்ள கழிவறை தொட்டிகள் மூடியிருப்பதையும், குடிநீர் தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்படுவதை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.