இந்த அறிகுறிகள் இருந்தா உங்களுக்கு ஏற்கனவே Heart Attack வந்திருக்கலாம்! ஆய்வில் அதிர்ச்சி

145
Advertisement

இதயத்திற்கு வர வேண்டிய இரத்தம் அடைபடும் போது மாரடைப்பு ஏற்படுகிறது.

நெஞ்சில் அழுத்தம் மற்றும் வலி மாரடைப்பின் பிரதான அறிகுறியாக பார்க்கப்படும் நிலையில், அன்றாடம் அலட்சியம் செய்யும் பல அறிகுறிகள் மாரடைப்பு ஏற்கனவே ஏற்பட்டிருப்பதை உணர்த்துவதாக அண்மையில் வெளியான ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்காட்லாண்டில் இதய மற்றும் பக்கவாத நோய் பாதித்த நோயாளிகளை தகவல்கள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கி பராமரிக்கும் Chest Stroke and Heart Scotland அமைப்பு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சில நேரங்களில் வாகனம் ஓட்டுதல் மற்றும் கடினமான வேலைகளை செய்யும் போது திடீரென உடல் வெப்பமாகி வியர்த்து கொட்டி கிட்டத்தட்ட 20 நிமிடங்களில் தானாகவே சரியாகி விட்டாலும் கூட அந்த நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ச்சியான உடல் சோர்வு, சருமம் வெளிரி போய் காணப்படுவது, காரணம் தெரியாத உடல்நலக்குறைவு மற்றும் பயமான உணர்வு silent heart attackஇன் அறிகுறிகளாக இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கழுத்தில் தொடங்கும் வலி பின் புறமாக முதுகிலும் மற்றும் இரண்டு கைகளிலும் பரவுதல், பதட்டம், மூச்சு வாங்குதல் மற்றும் மயக்கம் ஆகிய அறிகுறிகளும் மாரடைப்பை வெளிப்படுத்துவதாக அமையும் என கூறும் மருத்துவர்கள் இது போன்ற அறிகுறிகள் வந்து சற்று நேரத்தில் சரியாகி விட்டாலும் இதயத்தை பரிசோதித்து தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.