ஹெராயின் போதைப் பொருள் விற்ற 4 பேர் கைது

278

சென்னை பல்லாவரம் பகுதியில் ஹெராயின் போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அங்கு விரைந்த போலீசார், ஹெராயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த மேற்குவங்க மாநிலத்தை நான்கு பேரை கைது செய்தனர்.

மேலும், அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஹெராயின் போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அவர்கள் மாங்காடு பகுதியில் வீடு எடுத்து தங்கி கட்டிட வேலைகள் செய்வது போல், கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.