வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒளிப்பதிவாளர்

233

கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி துணை நடிகையை பாலியல் தொல்லை கொடுத்த ஒளிப்பதிவாளரை போலீசார்  கைது செய்தனர்.

சென்னையை அடுத்த கொளத்தூர் பகுதியை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் சின்னத்திரையில் நடித்து வருகிறார்.

இதையடுத்து சின்னத்திரையில் ஒளிப்பதிவாளராக வேலை செய்து வரும் வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த காசிநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகி நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி காசிநாதன் அப்பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பெண்ணை காசிநாதன் பாலியல் தொல்லை செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்த அப்பெண் அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் காசிநாதனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.