25 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்ட மாணவர்கள்

474

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கடந்த 130 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் விழா சிறப்பாக நடைபெற்றது.

150க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் பள்ளிக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கினர்.

மேலும் பள்ளிக்கு உதவும் நோக்கில் ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தனர்.