காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் – ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

221

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் ஜூன் 23ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவேரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருப்பதாக காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் கூறியிருந்தார்.

இதற்கு தமிழகம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

இந்த கோரிக்கையை ஏற்று 2வது முறையாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று நேரில் சந்திக்க உள்ளனர்.

அப்போது, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது என வலியுறுத்த உள்ளனர். அதைதொடர்ந்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்ட ஆலோசனையும் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.