14 கோடிக்கு விற்பனையான ஒட்டகம்

178
Advertisement

ஒட்டகம் ஒன்று 14 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

சௌதி அரேபியாவில் அண்மையில் ஒட்டக ஏலம் நடைபெற்றது..
அந்தப் பொது ஏலத்தில் விற்பனை செய்ய ஒட்டகம் ஒன்றை
அந்நாட்டுக்காரர் கொண்டுவந்தார்.

அந்த ஒட்டகத்துக்கான ஆரம்ப ஏலத்தொகை 5 மில்லியன் சௌதி
ரியால் அதாவது, 10 கோடியே 16 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டது.

Advertisement

இறுதியில் 7 மில்லியன் சௌதி ரியாலுக்கு ஒருவர் வாங்கினார்.
இதன் இந்திய மதிப்பு 14 கோடியே 23 லட்ச ரூபாய் ஆகும். இந்த
ஒட்டகத்தை வாங்கியவர் யார் என்கிற விவரம் வெளியிடப்படவில்லை.

சௌதி அரேபியாவில் இவ்வளவு அதிக தொகைக்கு ஏலம்போன
ஒட்டகம் உலகின் அரிதான ஒட்டகங்களுள் ஒன்றானதாகக்
கருதப்படுகிறது.

இந்த ஒட்டகம் அதன் சிறப்பு அழகு மற்றும் தனித்துவத்துக்காக
உலகம் முழுவதும் பிரபலமானது. உலகில் இந்த வகை ஒட்டகங்கள்
மிகவும் குறைவு.

உலகின் மிகப்பெரிய ஒட்டகக் கண்காட்சியும் சௌதி அரேபியாவில்
நடத்தப்படுகிறது.

உலகிலேயே விலையுயர்ந்த ஒட்டகம் ஏலம் விடப்பட்ட வீடியோ
தற்போது வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.