முதியோருக்கு இலவச பஸ் பாஸ்..

329

சென்னை மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில், 60 வயதிற்கு மேற்பட்ட சென்னைவாழ் மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில், இலவச பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

2022 ஜூன் மாதம் வரை பயணம் செய்யும் வகையில், மூத்த குடிமக்களுக்கு பயண அட்டை மற்றும் டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அடுத்த அரையாண்டிற்கான டோக்கன்கள் இன்று முதல் வழங்கப்பட உள்ளது.

அதன்படி, ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், அடுத்த 6 மாதங்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்கள் மற்றும் பயண அட்டைகள் ஜூலை 31ஆம் தேதி வரை 40 மையங்களில் வழங்கப்பட உள்ளது.

அதன் பின்னர், ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அந்தந்த பணிமனைகளின் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.