இங்கிலாந்தில் கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து பயன்பாட்டில் இல்லாத கட்டிடத்தின் அடிவாரத்தில் இருந்து 240 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடத்தின் மேம்பாட்டு பணியின்போது, தோண்டிய இடமெல்லாம் மனித எலும்புக்கூடுகள் கிடந்ததை கண்ட ஆராய்ச்சியாளர்கள், மேற்கொண்ட ஆய்வில், எலும்புக்கூடுகளில் தலை உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.
இவை 1405ஆம் ஆண்டில் மன்னர் ஓவைன் க்ளின்டர் தலைமையிலான பிரெஞ்சு மற்றும் வெல்ஷ் படைகளில் தாக்குதலால் இவர்கள் பலியாகி புதைக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.