பேரறிவாளனுக்கு ஜாமீன் : 30 வருட சிறைவாசத்திற்கு முற்றுப்புள்ளியா !

264
Advertisement

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்துவரும் பேரறிவாளன், கடந்த மே மாத இறுதியில் ஒரு மாத பரோலில் வெளியே வந்திருந்ததார். இதன்பின்னர் ஒவ்வொரு மாதமும் அவருக்கு பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. அப்படியே மே 28-க்குப் பின் 10-வது முறையாக கடந்த மாதமும் பரோல் நீட்டிப்பு இருந்தது.

ராஜீவ் கொலை வழக்கில் 1991 ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட பேரறிவாளன், சுமார் 26 ஆண்டுகள் கழித்து கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி முதல் முறையாக ஒரு மாத பரோல் விடுப்பில் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றிருந்தார் அவர். இதற்கு பிறகு அவருக்கு பத்துக்கும் மேற்பட்ட முறை அவருக்கு பரோல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளுக்கு பிறகு பிணை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

தனக்கு விடுதலை அளிக்கக் கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது, அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.இந்த ஜாமீன், எவ்வளவு நாட்கள் / மாதங்களுக்கானது குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் பேரறிவாளன் உட்பட எழுவரின் விடுதலை குறித்த குடியரசு தலைவர் ஆலோசனை பெறுவரை இந்த ஜாமீன் நீட்டிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.பேரறிவாளனின் ஜாமீனை தொடர்ந்து, இன்னபிற ஆறு பேரும் உச்சநீதிமன்றத்தில் தங்களுக்கும் ஜாமீன் கோரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.