சுவரில் ஏறும் குழந்தை…நம்பிக்கையூட்டும் வைரல் வீடியோ

246
Advertisement

குழந்தை ஒன்று பாறையின் உட்புறச் சுவரில் ஏறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில் சுமார் 2 வயதுக்கும் குறைவான குழந்தை ஒன்று பாறையின் உட்புறச் சுவரில் பதிக்கப்பட்டுள்ள சிறுசிறு கற்பிடிகளைப் பிடித்துக்கொண்டு எவ்விதத் தயக்கமும் பயமும் இன்றி உயரே ஏறிச்செல்கிறது. குழந்தையின் இந்தச் செயல் பலருக்கும் நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது.

குழந்தை வளர்க்கும் பெற்றோருக்கு மட்டுமன்றி, அனைவருக்கும் நம்பிக்கை தரும் செயலாக இந்தக் குழந்தையின் செயல் அமைந்துள்ளது.

பொறுமையாக சிந்தித்து செயல்பட்டால் தொழிலிலும் வெற்றிபெறலாம் என்பதற்கான உதாரணமாகவும் இந்த வீடியோ திகழ்கிறது.

இரண்டாண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.