Monday, November 25, 2024
Home Authors Posts by sathiyamweb

sathiyamweb

sathiyamweb
2848 POSTS 0 COMMENTS

இந்த மாதிரி முதுகு வலிக்குதா… உடனே மருத்துவரை பாருங்க

0
விளையாட்டு போட்டிகள்ல தீவிர பயிற்சி எடுக்குறவங்க, சண்டை பயிற்சிகள்ல ஈடுபடுறவங்க இவங்களுக்கு மட்டும் இல்லாம சாதாரணமா பள்ளி கல்லூரிகளுக்கு போய்ட்டு வர்ற மாணவர்களுக்கு முதுகுவலி ஏற்படுறது ரொம்பவே பரவலான நிகழ்வா மாறிட்டு வருது. வயசான பிறகு வர்ற இந்த வலிகளெல்லாம் இளம் வயதினருக்கு வர என்ன காரணம் இதை தடுக்குறதுக்கு என்ன செய்யணும் இதை பத்தி தான் இந்த வீடியோவில விரிவா பாக்க போறோம். முதுகுவலியால பாதிக்கப்படுற 80% மக்களுக்கு இருக்குறதுக்கு பேர் Mechanical backpain'ன்னு சொல்லப்படுது. அதாவது, டெஸ்ட் எடுத்து பார்த்தா இவங்களுக்கு தனிப்பட்ட மற்ற பிரச்சினைகள் எதுவும் இருக்காது. இந்த மாதிரியான backpain வர்றதுக்கான முக்கியமான இரண்டு காரணங்கள் என்னன்னா, ரொம்ப நேரம் உட்க்காந்து இருக்குறது. அடுத்தபடியா, சரியான positionல உக்காராம இருக்குறது. ஒரு சிலருக்கே முதுகெலும்பு டிஸ்க் சம்பந்தமானது மற்றும் ஜவ்வு கிழிதல் மாதிரியான பிரச்சினைகள்னால வலி ஏற்படலாம். laptop இல்லன்னா computer முன்னாடி உக்காந்து வேலை செய்யும் போது, திரையில தெரியுற முதல் வரிக்கு நேரா உங்க கண்ணு இருக்க மாதிரி உங்க sitting position இருக்கனும். கீழ்முதுகுக்கும் நாற்காலிக்கும் இடையே இடைவெளி இருக்கக் கூடாது. கைகளுக்கு சரியான support கிடைக்கணும். அதேமாதிரி computerஓட keyboard, mouse, மணிக்கட்டு ஆகிய மூணும் ஒரே வரிசைல இருக்கணும். அதிகமான தூரம் தினமும் இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுறவங்களுக்கும் முதுகுவலி வர்றது ரொம்பவே common. பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் முதுகுவலியை குறைக்க 2010ஆம் ஆண்டு பரிந்துரை செய்யப்பட்ட (யார் பரிந்துரை செய்தது?) விதிப்படி, மாணவர்கள் தங்களோட எடையில் 10 சதவீத எடையை மட்டுமே புத்தகப் பை எடையா சுமந்து போகணும். புத்தகப்பையை ரெண்டு பக்கமும் மாட்டணும். இதுனால ஒரு பக்கம்  சுமை ஏறும் வகையில இருக்குறது தவிர்க்கப்படும். நிறைய பேர் முதுகுவலி மற்றும் கழுத்து வலிக்காக belt ஒன்னு போட்டுட்டு தங்களோட வேலையை தொடர்ந்து செஞ்சுட்டே இருப்பாங்க. இந்த பெல்ட் உண்மையிலேயே எப்படி வேலை செய்துன்னு பாத்தா, தசை செய்ற வேலையை பெல்ட் செஞ்சுட்டு இருக்கும். ஆனா, இப்படி பெல்ட்டையே தொடர்ந்து யூஸ் பண்ணிட்டு இருக்கும் போது தசை மீண்டும் வலுவடையாது. வலி தீவிரமாக இருக்கும்போது மட்டுமே பெல்ட் யூஸ் பண்ணிட்டு, வலி குறைஞ்ச பிறகு மருத்துவர் பரிந்துரைக்குற சிகிச்சைகள் மற்றும் உடற்பயிற்சிகளை எடுத்துக்கிட்டா தான் தசை மறுபடியும் வலுப்பெற்று அதோட இயல்பான வேலையை செய்ய தொடங்கும். நீண்ட நாட்களாக இருக்கும் முதுகுவலி மற்றும் முதுகுவலி கால் வரைக்கும் பரவுறது, மரத்து போறது,  எடையிழப்பு, காய்ச்சல், பசியின்மை போன்ற அறிகுறிகள் இருந்தா மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். மிதமான தொடர் முதுகுவலிகளுக்கு physiotherapist கிட்ட தேவையான பயிற்சிகள் பெற்று பலன் பெறலாம். மற்றபடி அப்பப்ப வந்துட்டு போற முதுகுவலிக்கு சூழலியல் மாற்றங்களை செஞ்சாலே பெரிய வித்தியாசத்தை உணர முடியும். அதாவது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் உக்காந்து இருக்குற positionஅ மாத்தணும். உடலை சுறுசுறுப்பா வச்சுக்குறது, தேவையான ஓய்வு என இரண்டையும் சமச்சீரா பராமரிக்குறது முதுகுவலி பிரச்சினைல இருந்து விரைவில் தீர்வு காண உதவும். -ஷைனி மிராகுலா

ஆதார் கார்டு வைத்திருப்போரின் கவனத்திற்கு! முக்கிய தகவல்…

0
நமது அன்றாட வாழ்வில் அடிப்படையான விஷயங்களில் ஒன்று ஆதார் கார்டு. ஆதார் கார்டு என்பது இந்தியர்களின் தனிப்பட்ட அடையாள ஆவணம் ஆகும். தகுதியுள்ள நபர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் ஆதார் மூலமாக வழங்கப்படுகின்றன. ஆதார் கார்டு...

46 மருந்துகள் அதிரடி தடை? திடீர் ட்விஸ்ட்…

0
நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வரும் ஏராளமான மருந்து, மாத்திரைகளின் மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆய்வு செய்து வருகின்றன. அவ்வாறு, மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய...

பெண் தேர்வர்களை அவமானப்படுத்திய TNPSC…அதிர்ச்சியில் தேர்வர்கள்… பதில் சொல்லாத அமைச்சர்…

0
க்ரூப்-4 தேர்வு விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட கேள்விதான், இதையெல்லாம்கூடவா கேட்பார்கள் என இதுவரை இல்லாத அளவுக்கு பெண் தேர்வர்கள் மத்தியில் அதிர்ப்தியையும் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இருபாலரும் ஆர்வமுடன் பங்குபெறக்கூடிய போட்டி தேர்வுகளில் ஒன்று TNPSC.  இதற்கான அறிவிப்பு ஜனவரி 30 ஆம்...

இந்த மூணு டெஸ்ட்-ல FAIL ஆனா.. அடுத்த 3 மணிநேரத்துல மாரடைப்பு confirm ..

0
அண்மைக்காலமாக மாரடைப்பு மற்றும் இருதய நோய்கள் மிகவும் பொதுவானதாகவும், மக்களை அச்சுறுத்துவதாகவும் மாறிவிட்டது. வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும் என நினைத்துக்கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. மிக இளம் வயதினர் கூட மாரடைப்பால் இறந்து...

இது மட்டும் தெரிஞ்சா இனி மறந்துகூட PROTEIN POWDER எடுக்கமாட்டீங்க…

0
இன்றைய காலக்கட்டத்தில் 100-ல் 90% பொதுமக்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காக ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்வார்கள். இதுமட்டுமல்லாமல், இளைஞர்கள் கட்டுமஸ்தான உடலமைப்பை உருவாக்கிக்கொள்ளவும் பெண்கள் உடம்பை குறைத்து ஃபிட்டாக ஜிம்முக்கு செல்வதோடு, எந்தவிதமான முறையான அனுபவமும் இல்லாத ஜிம் மாஸ்டர்களின் பரிந்துரையில் புரதச்சத்து மாவு...

திக் திக் 90 நிமிடங்கள்!கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!கொடூரத்தின் உச்சம்…

0
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குரங்கணி மலைப்பகுதியில் உள்ளது முதுவாக்குடி என்னும் பழங்குடி கிராமம். இங்கு சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இக்கிராமத்தில் தான் வினோத், முருகேஸ்வரி தம்பதி வசித்துவருகிறார்கள். 4 மாத கர்ப்பிணியாக இருந்த முருகேஸ்வரிக்கு...

இலவச மின்சாரம்? எப்படி விண்ணப்பிக்கணும் தெரியுமா?

0
சூரிய மின்சக்தியை பயன்படுத்தி 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடங்கிவைத்தார். இதுகுறித்தான, கூடுதல் விவரங்களை இந்த காணொளி தொகுப்பில் பார்க்கலாம். கடந்த 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

உங்க வீட்ல கரண்ட் பில் கட்டுறீங்களா? உங்களுக்கு தான் அவசர பதிவு!!!

0
தமிழகத்தில் மின் உற்பத்தி, மின் பகிர்மானம் மற்றும் தொடரமைப்பு ஆகிய பணிகளை ஒருங்கிணைத்து TNEB எனப்படும் தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் TANGEDCO , தமிழ்நாடு மின் தொடரமைப்பு...

இத்தனை பேருக்கு 1,000 ரூபாய் கிடைக்க போகுதா? 

0
2024 - 2025ஆம் வருடத்துக்கான தமிழ்நாடு அரசோட பட்ஜெட்,  சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கு. நிதி நிலை அறிக்கையில பல முக்கிய அறிவிப்புகள் வெளியான நிலையில, மாணவ மாணவியருக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரொம்பவே...

Recent News