பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்திய நிலையில், இன்று ஒருநாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் போட்டியில் பரபரப்பு தொற்றியுள்ளது.
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 556 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.
பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 148 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 97 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளர் செய்தது.
இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 506 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசம் சதமடித்து அசத்தினார்.
தொடக்க வீரர் அப்துல்லா அரைசதம் அடித்து அசத்தினார்.
4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்துள்ளது.
பாபர் ஆசம் 102 ரன்களுடனும், அப்துல்லா 71 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இன்று ஒருநாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற 314 ரன்கள் தேவைப்படுவதால், போட்டியில் பரபரப்பு தொற்றியுள்ளது.