விபசார விடுதி நடத்தி வந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அசாம் பா.ஜ.க. துணை தலைவர் பெர்னார்டு மராக் ரிம்பு, உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.

212

பண்ணை வீட்டில் விபசார விடுதி நடத்தி வந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அசாம் பா.ஜ.க. துணை தலைவர் பெர்னார்டு மராக் ரிம்பு, உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.

அசாமில் பா.ஜ.க. துணை தலைவரின் பண்ணை வீட்டில் செயல்பட்ட விபசார விடுதியில் இருந்து காவல்துறையினர் 6 குழந்தைகளை மீட்டனர். பண்ணை வீட்டில் இருந்து செல்போன்கள், 36 வாகனங்கள், 414 மதுபாட்டில்கள், ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக 73 பேரை கைது செய்த போலீசார், அசாம் பா.ஜ.க. துணை தலைவர் பெர்னார்டு மராக் ரிம்புவை தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த ரிம்புவை விசாரணைக்கு ஒத்துழைக்கவும், உடனடியாக சரணடையவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அவருக்கு எதிராக நீதிமன்றம் பிணையில்லா பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இந்நிலையில், பண்ணை வீட்டில் விபசார விடுதி நடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த அசாம் பா.ஜ.க. துணை தலைவர் பெர்னார்டு மராக் ரிம்பு, உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை அசாம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.