ஆர்யன்கான் வழக்கை விசாரித்த அதிகாரி இடமாற்றம்

319

மும்பையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெறுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் கப்பலில் அதிரடி சோதனை நடத்திய அதிகாரி சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் போதை பொருள் பயன்படுத்திய கூறி நடிகர் ஷாருகானின் மகன் ஆர்யன் கான் உள்பட பலரை கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் சிறப்பு விசாரணை குழு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இதில் 14 பேர் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், ஷாருகானின் மகன் ஆர்யன் கானின் பெயர் இடம்பெறவில்லை.

இந்த நிலையில் ஆர்யன்கான் வழக்கை விசாரித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.