அவசர நேரத்தில் உயிரை காப்பாற்றிய வாட்ச்

211
watch
Advertisement

சிங்கப்பூரில் சாலை விபத்தில் சிக்கி மயக்கமடைந்த இளைஞரின் உயிரை ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் காப்பாற்றி இருக்கிறது.

நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களுக்கு பெரிதும் துணைபுரிந்து வருகிறது. அந்த வரிசையில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச், விபத்து நேரத்தில் ஒருவரின் உயிரை காப்பாற்றி உள்ளது.

ஆபத்து காலங்களில் நண்பர்களுக்கும் அவசர உதவி பிரிவுக்கும் தகவல் தெரிவிக்கும் எஸ்.ஓ.எஸ் வசதி ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சில் உள்ளது.

ஏதேனும் ஆபத்தான நேரங்களில் அல்லது அவசர காலங்களில் வாட்சில் தூண்டப்படும் அதிர்வுகள் அல்லது வாட்சில் உள்ள பட்டனை அழுத்துவதன் மூலம் அவசர உதவி எண்களுக்கு இருப்பிடத்துடன் கூடிய தகவல் சென்று விடும்.

அந்தவகையில், சிங்கப்பூரில் முகமது ஃபிட்ரி என்ற இளைஞர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரின் வாகனத்தின் மீது வேன் ஒன்று மோதியது. இதில், முகமது ஃபிட்ரி நிலை தடுமாறி சாலையில் விழுந்து மயக்கமடைந்தார்.

விபத்தின் காரணமாக ஏற்பட்ட அதிர்வுகளால் முகமது ஃ பிட்ரியின் கையில் அணிந்திருந்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சில் இருந்து அவரது நண்பர்களுக்கு தகவல் சென்றுள்ளது. ஆனால் அந்த தகவலுக்கு பதில் எதுவும் கிடைக்காத நிலையில் உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்தது ஸ்மார்ட் வாட்ச் .

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் விரைந்து வந்ததால் முகமது ஃ பிட்ரி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஸ்மார்ட் வாட்ச் இளைஞரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.