சூடு பிடித்த நாவல் பழ விற்பனை

314

ஆந்திர மாநிலத்தில், ஜம்பு எனப்படும், ஹைபிரிட் ரக நாவல் பழம் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த நாவல் பழமானது திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆந்திராவிலிருந்து வியாபாரிகள்  உடுமலை பகுதிக்கு நாவல் பழங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.

ஜம்பு நாவல் பழத்தை பொதுமக்கள் விரும்பி வாங்குவதால், நாவல் பழ விற்பனை சூடு பிடித்துள்ளது.

சில்லறை விற்பனையில் ஒரு கிலோ நாவல் பழங்கள் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.