பிரதமர் மோடியின் கேள்விக்கு 8 வயது சிறுமி அளித்த பதிலால் சிரிப்பலை எழுந்தது

331

தான் யார் என தெரியுமா? என்ற பிரதமர் மோடியின் கேள்விக்கு 8 வயது சிறுமி அளித்த பதிலால் சிரிப்பலை எழுந்தது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அனில் பிரோஜியா, தனது குடும்பத்தினருடன் பிரதமர் மோடியை நேற்று சந்தித்தார். அப்போது, அனிலின் 8 வயது மகள் ஆஹானாவிடம் தன்னை யார் என்று தெரியுமா? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். அதற்கு சிறுமி தெரியும் என்றும் டிவி-யில் பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், நீங்கள் மக்களவை டி.வி-க்காக வேலை பார்த்து வருகிறீர்கள் என்று சிறுமி தெரிவித்துள்ளார். இதை கேட்ட பிரதமர் மோடி உட்பட அங்கு இருந்த அனைவரும் சிரித்தனர். இதையடுத்து பிரதமர் மோடி, சிறுமிக்கு சாக்லேட்டை பரிசாக கொடுத்து அனுப்பி வைத்தார்.