பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது…

144
Advertisement

அண்ணாமலையின் பேச்சால் அ.தி.மு.க கூட்டணியில் அண்மையில் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மத்திய அமைச்சர் அமித்ஷா, அதி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இருப்பதாக உறுதிப்படுத்தினார். இதைதொடர்நது அ.தி.மு.க தலைவர்கள் மற்றும் அண்ணாமலை ஆகியோர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து பேசினார். இதனால் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியதால், அ.தி.மு.க – பா.ஜ.க இடையே மீண்டும் வார்த்தை மோதல் முற்றியுள்ளது. இரு கட்சிகளின் தலைவர்களும் மாறி மாறி விமர்சித்து வருவதால், கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.