அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு – நேற்று 612 ரயில்கள் ரத்து

273

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் நேற்று 612 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக இந்திய ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.

அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

போராட்டத்தின்போது, பீகார், உத்தர பிரதேசம், ஹரியானா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை வெடித்தது.

இதில், பல ரெயில்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டு, ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன.

இந்நிலையில், இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், போராட்டம் காரணமாக, 223 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 379 பயணிகள் ரயில்கள் என மொத்தம் 595 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.