அக்னிபாத் திட்டம் – பீகாரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

320

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பீகாரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.

இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பீகாரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில், வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜெகனாபாத்தில் வெடித்த கலவரத்தில் வாகனங்கள் தீக்கிரையாகின. அதன்காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.