அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு – டெல்லியில் நாளை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

347

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நாளை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ரயில்களுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடந்தேறின.

இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நாளை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.