அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச, எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்….

74
Advertisement

எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பின்னர், முதல் முறையாக,

எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்லவுள்ளார். அங்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்துப் பேசவுள்ளார். அதிமுக-வுடன் பாஜக கூட்டணியில் உள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளதால், இந்த சந்திப்பின்போது நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக இடையான வார்த்தை மோதல் குறித்தும் அமித்ஷாவுடன் விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், டெல்லியில் அதிமுக அலுவலகம் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பணிகளையும் எடப்பாடி பழனிசாமி பார்வையிடவுள்ளார். இந்த பயணதின் போது, நேரம் கிடைத்தால் பிரதமர் மோடியையும் எடப்பாடி பழனிசாமி சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.