குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு

227

தனது சர்ச்சை பேச்சு குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோரியுள்ளார். குடியரசுத் தலைவர் குறித்து, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதற்கு, பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்தது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, பா.ஜ.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தனது பேச்சுக்கு, மன்னிப்பு கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி மும்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார். தான் வாய் தவறி பேசிவிட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.