அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம்.. செபி கொடுத்த விளக்கம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு என்ன….?

204
Advertisement

அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க பங்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி-க்கு 2 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை கூடுதல் அவகாசம் கேட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், செபிக்கு கூடுதலாக 3 மாத கால அவகாசம் வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஆனால் செபி குறைந்தது 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், கால நீட்டிப்பு கோரிய மனுவை மே 15 திங்கட்கிழமை பரிசீலிப்பதாக ஒத்திவைக்கப்பட்டது

பொதுச் சந்தையில் இருக்கும் அதானி குழுமம் பங்குகளின் அளவுகள் தொடர்பாக ஏதேனும் விதிமுறைகளை மீறியுள்ளதா என்பதை ஆய்வு செய்து 11 வெளிநாட்டுக் கட்டுப்பாட்டாளர்களை ஏற்கனவே அணுகியுள்ளதாக SEBI சுப்ரீம் கோர்ட் சமர்ப்பித்துள்ளது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட நிறுவனம் பங்குகளை அரசின் விதிமுறைகளுக்கு இணங்க பொது சந்தையில் இருக்க வேண்டும். இந்த விதிமுறையை மீறி அதானி குழுமத்தின் நிறுவன பங்குகளை கௌதம் அதானி அவரது சகோதரர்கள் வாயிலாக வெளியிடும் விதிமுறைகளை மீறி அதிக இருப்பு வைத்திருக்கும் காரணத்தால் இந்த விலை உயர்வு என ஹிண்டன்பர்க குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டின் உண்மை தன்மையை விசாரணை செய்ய செபி தற்போது சர்வதேச பத்திரங்கள் ஆணையங்களின் அமைப்பு உடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் செபி தனது அறிக்கையில் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட 51 நிறுவனங்கள், உலகளாவிய டெபாசிட்டரி ரெசிபிட் வழங்கியது குறித்து விசாரணை நடத்தப்பட்டது, விசாரணை முடிந்தது, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இதில் அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட எந்த நிறுவனமும் இந்த 51 நிறுவனங்களின் பட்டியலில் இல்லை. இந்த 51 நிறுவனங்களின் விசாரணை நடவடிக்கையை மேற்கோள் காட்டி 2016 ஆம் ஆண்டு முதல் செபி அதானி குழுமத்தை விசாரணை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் ‘உண்மையில் ஆதாரமற்றவை’ என்று செபி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கைகள் கூறியுள்ளது விளக்கம் அளித்துள்ளது.