நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி…

171
Advertisement

நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ரோஜா.
இவர் பிரபல இயக்குனர் ஆர்கே செல்வமணியின் மனைவியாவார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரோஜா ஆந்திர மாநிலத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக உள்ளார்.

இந்நிலையில் ரோஜா செல்வமணி நேற்று இரவு திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கால் வலி மற்றும் கால் வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.