சூடானில் இருந்து 1 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு பயணம் செய்துள்ளதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

89
Advertisement

சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதலால்,

அங்குள்ள மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், சூடானில் இருந்து ஒரு லட்சம் மக்கள், எகிப்து உள்ளிட்ட அண்டை நாடுகளுக்குள் தஞ்சம் புகுந்ததாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையம் தெரிவித்துள்ளது.100 டிகிரி அளவுக்கு கொளுத்தும் வெயிலில் மக்கள் சூடானை விட்டு வெளியேறி வருகின்றனர் என்றும் பசி, பட்டினியோடு போராடிய உயிரை கையில் பிடித்து கொண்டு இடம் பெயர்ந்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், போரால் பாதிக்கப்பட்ட 3 லட்சம் பேர் உள்நாட்டிலேயே வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.