வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் இஸ்ரோ 279 மில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

272

வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் இஸ்ரோ 279 மில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் இஸ்ரோவின் வருமானம் தொடர்பான கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதன்படி, பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 34 நாடுகளின் 345 செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவியிருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் வர்த்தக ரீதியாக 279 மில்லியன் டாலர்கள் அளவுக்கு அன்னிய செலாவணி கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்