கனரக லாரி மீது மினி பேருந்து மோதி விபத்து

261

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை பகுதியில் இருந்து இசை கச்சேரிக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்ற தனியார் மினிபேருந்து பரனூர் சுங்கசாவடி அருகே கனரக லாரி மினி பேருந்து மீது லேசாக உரசியது.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மினி பேருந்தில் பயணம் செய்த 4 பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

விபத்து குறித்து செங்கல்பட்டு தாலுகா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.