கர்நாடகாவின் கோலாப்பூரில் இருந்து பெங்களூர் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
நள்ளிரவு 1 மணியளவில் டிராக்டர் ஒன்றை முந்தி செல்ல முயன்றபோது, தார்வாத் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் ஓட்டுனர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். பலர் காயமடைந்தனர்.
அவர்களை ஹுப்ளி நகரில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
இதில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 7 ஆக உள்ளது. 26 பேர் காயமடைந்து உள்ளனர்.
அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.