ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் 2வது நாளாக IT ரெய்டு

277

பிரபல ஆர்த்தி Scan மையம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் 45 கிளைகள் உடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த நிறுவனம் முறையாக வருமானவரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், சென்னை வடபழனி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஸ்கேன் மையங்கள் மற்றும் நிறுவனத்திற்கு தொடர்புடைய 25 இடங்களில் நேற்று காலை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை பகுதிகளை சேர்ந்த சுமார் 200 வருமானவரித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இன்றும் தனியார் Scan மையத்திற்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.