சேலை உடுத்தி சாலையில் செல்லும் இளைஞர்

410
Advertisement

https://www.instagram.com/p/CVdldcxNy8l/?utm_source=ig_web_copy_link

சேலை உடுத்திச் செல்லும் இளைஞரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஃபேஷன் மார்க்கெட்டிங் மற்றும் தகவல் தொடர்பு மாணவரான சென் இத்தாலியின் ஃபுளோரன்ஸ் நகரில் பயின்று வருகிறார். கொல்கத்தாவைச் சேர்ந்த அவர் இத்தாலி நாட்டில் மிலன் தெருவில் தான் சேலையுடுத்தி சாலையில் செல்லும் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

உலகின் ஃபேஷன் மையங்களுள் ஒன்றான மிலன் தெருக்களில் தனது போட்டோ ஷுட்டுக்காக சேலை அணிந்து சென்றது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது. பலரின் பாராட்டுகளையும் சென்னின் தோற்றத்தையும் பெற்றுவருகிறது.

இதுபற்றித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், ”புடவை உடுத்தும் ஆணாக இருப்பது என்னை எங்கும் அழைத்துச்செல்லாது. உலகின் முக்கிய ஃபேஷன் நகரத்தின் தெருவில் யார் நடப்பார்கள் என யூகிக்கவா?” என்று கேட்டுள்ளார். தற்போது சென்னுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

உடைகள் பாலினத்தால் வரையறுக்கப்பட்ட காலம் போய்விட்டது. ஒருகாலத்தில் ஆடை உடுத்தியிருப்பதைப் பார்த்தே ஒருவர் ஆணா, பெண்ணா என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. அந்த நிலை மாறிவருகிறது. ஆண்களுக்கு மட்டுமே என்றிருந்த ஆடைகளை இன்று பெண்கள் சர்வ சாதாரணமாக அணிந்து அனைத்து இடங்களுக்கும் சென்றுவருகின்றனர்.

அதேபோல், ஆண்களும் சேலை அணியத் தொடங்கியுள்ளனர்.
இனி, சேலை பெண்களுக்கான உடையல்ல….ஆண்களுக்கானதுங்கூட…. அது சரி, பேஷனுக்கு எல்லை ஏது?