முகப்பருவால் ஊதா நிறத்தில் மாறிய மூக்கு அறிகுறிகளை முன்பே கவனிக்காததால் பாதி மூக்கை இழந்த பெண்…!

22
Advertisement

பெண் ஒருவர் தனது மூக்கில் ஏற்பட்ட முகப்பருவை அலட்சியமாக விட்டதால் அது ஏற்படுத்திய பெரிய நோய் குறித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

நியூசிலாந்து நாட்டை சேர்ந்த 52 வயது பெண் மிச்சல் டேவிஸ்சுக்கு திடீரென முக்கில் முகப்பரு ஏற்பட்டது, ஆனால் அப்பெண் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டார், 6 மாத காலத்தில் நாளுக்கு நாள் அந்த முகப்பரு பெரிதாகத் துவங்கியது, இதனால் இவர் மேக்கப்பை வைத்து அதனை மறைக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் அந்த முகப்பரு திடீரென ஊதா நிறமாக மாற துவங்கியது. பின்னர் மிகவும் வறட்சியாக மாறியது.

இதனால் அதனை நசுக்க முயன்ற போது அதிக இரத்தம் வெளியே வந்தது. அப்போது ஆபத்தை புரிந்துக் கொண்டார் மிச்சல், இருப்பினும் ஒரு மாதம் கழித்தே மருத்துவரை சந்தித்தார், கிட்டதட்ட 9 மாதங்களுக்குக் கட்டியோடு இருந்த பெண்ணுக்கு மருத்துவர் அதிர்ச்சி தகவலைச் சொன்னால், அதாவது மூக்கு basal cell carcinoma என்ற அரிய வகை தோல்புற்று நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது என்றார், இந்த புற்றுநோயால் அமெரிக்காவில் வருடத்திற்கு 3.6 மில்லியன் மகள் பாதிக்கப்படுகிறார்கள், இதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து பெண்ணின் முக்கில் உள்ள கட்டி வெளியேற்றப்பட்டது, எனவே அவர் கிட்டதட்ட பாதி மூக்கு தசைகளை இழந்தார், ஆனால் அங்கு மாற்று தசைகளை வைக்கப்பட்டது, மேலும் அவர் சிகிச்சைக்கு பிறகு நன்றாக உள்ளார், ஆனால் இன்னும் சில நாட்கள் தாமதமாகி இருந்தால்.

அவரது முக்கை மொத்தமாக எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கும் என்றார், எனவே இவர் மருத்துவரை பார்க்காமல் காலத்தைக் கடத்தியது மிகப் பெரிய தவறு என்று புரிந்துக் கொண்டார், இதனால் மிச்சல் டேவிஸ் basal cell carcinoma குறித்த விழிப்புணர்வை தீவிரமாகச் செய்து வருகிறார், எனவே முகப்பருவை எளிதாக நினைக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் பொதுவாக அறிவுறுத்துள்ளனர்.