மும்பையில் படப்பிடிப்பு தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

305

மும்பையில் படப்பிடிப்பு தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அந்தேரி பகுதியில் வணிக வளாகங்கள் நிறைந்த பகுதிக்கு நடுவே உள்ள படப்பிடிப்பு தளத்தில் மாலை 4.30 மணியளவில் தீப்பற்றியது. தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. தீப்பற்றிய இடத்திலிருந்து எழுந்த தீயால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.