டெல்லியில் நைஜீரியாவை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

242

டெல்லியில் நைஜீரியாவை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 14ஆம் தேதி முதல் முறையாக கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் 3 பேர், டெல்லி, ஆந்திராவில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

முதலில் தொற்று பாதித்த நபர் குணமடைந்த நிலையில், திருச்சூரைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், டெல்லியில் நைஜீரியாவை சேர்ந்த நபரக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் வெளிநாடுகளுக்கு எந்தவித பயணமும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. இதேபோல இந்தியாவில் குரங்கு அம்மை நோய் தொற்றின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.