கூடலூர் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழிமறித்தால் பரபரப்பு

29

கூடலூர் – மைசூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழிமறித்தால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்தது. காட்டு யானை சாலையின் நடுவே நின்று வாகனங்களை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென காட்டு யானை வாகனங்களை நோக்கி சென்றதால், அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள், வானங்களை திரும்பி வந்த வழியே சென்றனர். சிறிது நேரத்திற்கு பிறகு காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றதால், வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்தனர்.