அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் கருப்பின பெண் நீதிபதியாக கேதன்ஜி பிரவுன் ஜாக்சன் பதவியேற்றார். கடந்த அதிபர் தேர்தலின்போது, பிரச்சரத்தில் ஈடுபட்ட அதிபர் ஜோ பைடன், தேர்தல் வாக்குறுதியாக, கருப்பின பெண்ணை நாட்டின் மிக உயர்ந்த நீதித்துறைக்கு நியமிப்பதாக உறுதியளித்தார். அதன்படி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் கருப்பின பெண் நீதிபதியாக கேதன்ஜி பிரவுன் ஜாக்சன் என்பவரை அதிபர் ஜோ பைடன் நியமித்தார்.
51 வயதான கேதன்ஜி, 116வது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். வாஷிங்டனில் நடந்த பதவி ஏற்பு விழாவில், அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.