நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 23-ம் தேதி பாட்னாவில் கூடுகிறது.

170
Advertisement

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில்,

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். இதற்காக வரும் 12-ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. பின்னர், பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது

. இந்த நிலையில், வரும் 23ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என ஐக்கிய ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்க உள்ளனர்.

உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பங்கேற்க உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தீபன்கர் பட்டாச்சார்யா உள்ளிட்டோரும் பங்கேற்பது உறுதியாகி உள்ளது.