மருத்துவமனைக்கே போகும் நீதிபதி அல்லி! செந்தில் பாலாஜிக்கு செக்? கஸ்டடியில் எடுக்கும் அமலாக்கத்துறை?

354
Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடுத்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒரு பக்கம் நடந்த நிலையில் இன்னொரு பக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுக்க அமலாக்கத்துறை தீவிரமாக முயன்று வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகக் கூறி, அவரது மனைவி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கப் பிரிவினரால், நேற்றிரவு கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தனது கணவரை அமலாக்கப் பிரிவினர் சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாகவும், அவரை விடுவிக்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் திமுக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வில் முறையிட்டார்.

அப்போது அவர், நேற்று காலை 7 மணி முதல் அமலாக்கப்பிரிவினர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தியதாகவும், விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்த நிலையில், சட்டவிரோதமாக காவலில் வைத்திருப்பதாக தெரிவித்தார். கைது செய்யப்பட்ட போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், கைது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என குற்றம் சாட்டிய அவர், இந்த வழக்கை அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்த முறையீட்டை நீதிபதிகள், மனுவுக்கு எண்ணப்பட்ட விஷயத்தை, நீதிமன்றத்தில் தெரிவித்தால், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் 2.15 மணிக்கு வழக்கு விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடி திருப்பமாக செந்தில் பாலாஜி தரப்பில் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சக்திவேல் விலகினார்.